ஜனாதிபதி தேர்தலில் 16 வேட்பாளர்கள் கட்டுப்பணம்
Friday, December 5, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கென 16 வேட்பாளர்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அங்கிகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயாதீன குழுக்கள் என்பன நேற்று வரையிலும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ. அமரதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment