பௌத்தத்திற்கு அவதூறு ஏற்படுத்த வேண்டாம் என கோரி மரித்தில் ஏறி ஆர்ப்பாட்டம்
Thursday, November 6, 20140 comments
பௌத்த சிந்தனைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி, நபரொருவர் கண்டி நகரிலுள்ள மரமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அதுறுகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு சுமார் 50 அடி உயரமுள்ள மரமொன்றில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்வதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தரின் உருவத்தை பத்திரிகைகள், நாள்காட்டிகள் மற்றும் வெசாக் வாழ்த்து அட்டைகளில் அச்சிடுவதை நிறுத்துமாறு கோரியே இவர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
இது குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிகாரிகளால் உரிய தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment