கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பி விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி. முஸ்லிம் காங்கிரஸின் கரையோர மாவட்ட யோசினை நாட்டில் பிரிவினைவாதாத்திற்கு வித்திடும் என குறிப்பிட்டு அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பின்னள் பெரும் அரசியல் இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் கரையோர மாவட்ட யோசனைக்கு அம்பாறை முஸ்லிம்களிடையே பெரும் ஆதரவு இருக்கின்றது. அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசுடன் இணைந்து சரணாகதி அரசியல் நடத்துவதை மக்கள் விரும்பவில்லை. எனினும் முஸ்லிம்கள் மீது கடும்போக்குவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அரசின் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ்மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்து ஐக்கிய தேசிய கட்சியின் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். ஐ.தே.க.வுக்கு வெகுவாக கிழக்கில் ஆதரவு அதிகரிக்கின்றது. இது இப்படியிருக்க ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசுக்கு தாவ திட்டமிட்டிருக்கும் விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி.க்கு முஸ்லிம்களின் ஆதரவை தகர்க்கும் வேலைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதன் முதற்கட்டமாகவே இந்த கரையோர மாவட்ட கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்து ஐ.தே.க.வுக்கு இழுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இது ஐ.தே.க. வின் முஸ்லிம் வாக்கு வங்கியை இல்லாது செய்வதற்கு மேற்கொள்ளப்படும் சதி என அக்கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
ஆளும் கட்சியினருடன் சேர்ந்து அவர் மேற்கொள்ளும் திட்டங்களில் இதுவும் உள்ளடங்குவதாகவும் அந்த நம்பத்தகுந்த நபர் தெரிவித்தார். இதனை கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்தார்.

Post a Comment