கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திற்குள் திருடர்கள் நுழைந்ததாக
கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினரும், கறுவாத்
தோட்டம் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரசாயனவியல்
மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு
வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித்
ரோஹன குறிப்பிட்டார்.
அத்துடன், திருடர்களினது என சந்தேகிக்கப்படும்
05 கைரேகைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் தொடர்பான
அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும்,
அருங்காட்சியகத்தில் தற்போது திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால்
சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.
தேசிய அருங்காட்சியகத்தில் திருடர்கள் நுழைந்தமை தொடர்பில் விசாரணை
Tuesday, November 18, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment