ஊவா முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து - மூவர் பலி

Tuesday, November 18, 20140 comments

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham