மத்திய மாகாண முஸ்லிம் லீக்கிற்கு சொந்தமான ஜின்னா மண்டபம் அமைந்துள்ள காணியை சிலர் சில வருடங்களுக்கு முன் தனியாருக்கு விற்பனை செய்துள்ளமை தொடர்பாக ஜின்னா மண்டப தர்ம கர்த்தாக்கள் மத்திய பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சொத்து சில வர்த்தகர்கள் மத்திய மாகாண முஸ்லிம் லீக் எனும் அமைப்புக்கு அன்பளிப்புச் செய்ததாக அதன் மூல உறுதி கூறுகின்றது. இதை பாவிக்க வேண்டிய முறைகளும் கூறப்பட்டு இருந்தது.
சில காலம் இந்த அமைப்பு செயல் இழந்து இருந்தது.
இக்கால கட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளைப் வகிப்பவர்களாகக் காட்டி அந்த பதவிகளைப் பாவித்து
இச்சொத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விற்றவர்கள் குறிப்பிட்ட பதவிகளில் இருக்காதவர்கள். அத்தோடு அதனை விற்க எவருக்கும் அனுதியில்லை. இதை வாங்கியவர் இன்னுமொருவருக்கு விற்றுள்ளார்.
அவ்வாறு வாங்கியவர் காணியிலுள்ள கட்டிடத்தில் நுழைய முயன்று வெற்றியளிக்கவில்லை. இது தொடர்பாகவும் கண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்றது.
இந்த நிலையில் அந்த முஸ்லிம் நபர் இச்சொத்தை ஒரு பெரும்பான்மை இனப்பெண்ணுக்கு விற்றுள்ளார். அவர் ஒரு குழுவுடன் வந்து கதவினை உடைத்து ஆக்கிரமிப்பு செய்தார்.
இது தொடர்பாகவும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அனுமதியில்லாத இந்த விற்பனைகள் தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment