ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமெடுக்க கூடுகிறது மு.கா. உயர்பீடம்

Saturday, November 22, 20140 comments


ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் நாளை கூடவுள்ளது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாக அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham