கொட்டிகாவத்தை – முல்லேரிய பிரதேச சபை தலைவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

Friday, November 28, 20140 comments



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக, கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்கராச்சி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை கூட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் ஆதரவும் சோலங்கராச்சிக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் பிரசன்ன சோலங்கராச்சி முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தேர்தல் பிரச்சாரத்தின் போதே பாரதலக்ஷ்மன் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham