பன்சலையில் புரட்சி: மதமாற்றமும் முரண்பாடுகளும் (தொடர்)

Thursday, November 20, 20140 comments


சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் விக்டர் ஐவன் பன்­மைத்­துவ சமூ­கத்தில் தனது
அர­சி­யல்சார் எழுத்­துக்­க­ளையும் கருத்­துக்­க­ளையும் ஒரு தனித்­து­வ­மான கோணத்தில் முன்­வைக்க கூடி­யவர். அவரால் 2006 காலப்­ப­கு­தியில் எழு­தப்­பட்ட பன்­சலே விப்­ல­வய (பன்­ச­லையில் புரட்சி) என்ற நூல் இலங்கை இனப்­பி­ரச்­சி­னை­யுடன் பிணைந்­துள்ள மதம்சார் பிரச்­சி­னையை அல­சு­வதுடன் இவ்­வி­ட­யத்தை ஒரு மாற்று உரை­யாடல் களத்­துக்கு  கொண்டு செல்ல முயற்சிக்கிறது. அந்தவகையில் இன்று முஸ்லிம் சமூகம் நாட்டில் எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு சில தீர்­வு­க­ளையும் படிப்­பி­னை­க­ளையும் புரி­தல்­க­ளையும் இந்நூல் உரு­வாக்கும் என்­பதை இந்­நூலை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. காலப் பொருத்தம் கருதி இந்­நூலை மையப்­ப­டுத்­திய சில கருத்­துக்­களை தொடராக 'நம்மவன்' வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.












(தொடர் 01) 


கங்­கொ­ட­வில சோம­ தே­ரரின் மறை­வுக்கு பின்னர் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லையை தொடர்ந்தே நூலா­சி­ரியர் இந்­நூலை எழுத ஆரம்­பித்­த­தாக அவ­ரது முன்­னு­ரையில் குறிப்­பிட்­டுள்ளார். வர­லாறு நெடு­கிலும் இலங்கை முகம் கொடுத்து வந்­துள்ள இனப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கும் மதங்­க­ளுக்கும் வெகு­வான தொடர்­புண்டு. அதே­நேரம் பௌத்த மதம் சிங்­கள இனத்­துடன் இணைந்­த­மையும் பிரச்­சி­னை­க­ளுக்­கான காரணம் என அவ­ரது முன்­னு­ரையில் தொட்­டுக்­காட்­டி­யுள்ளார்.

கண்­ணுக்கு புலப்­ப­டக்­கூ­டிய, புலப்­ப­டாத எல்லா வகை­யான கார­ணங்கள் தொடர்­பிலும் அல­சப்­படும் போதே எமது நாடு முகம் கொடுத்­துள்ள இனம் சார்  பிரச்­சி­னை­க­ளுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்கும் என விக்டர் ஐவன் எதிர்வு கூறு­கின்றார்.

இலங்­கையில் மதங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் அல­சு­வ­தற்கு முன்னால் மதங்­களின் வருகை மற்றும் அவற்றின் விஸ்­த­ரிப்பு தொடர்­பி­லான ஒரு வர­லாற்றுப் பார்வை தேவை.


மனித வர­லாற்றின் ஆரம்ப காலப்­ப­கு­தியில் மக்கள் சிறு குடிப்­ப­ரம்­ப­லுக்குள் சிறு­கோத்­தி­ரங்­க­ளா­கவே வாழ்ந்­தனர். ஒவ்­வொரு கோத்­தி­ரத்­தி­ன­ருக்கும் தனி­யான கட­வுள்கள்  காணப்­பட்­டனர். குறித்த கோத்­தி­ரத்தின் நிலப்­ப­ரப்பை கோத்­தி­ரத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்த கட­வுள்­களே பாது­காத்து வரு­வ­தா­கவும்
நம்பினர். கால­வோட்­டத்தில் சிறு­கோத்­தி­ரங்கள் இணைந்து சிற்­ற­ர­சு­க­ளாக  உரு­வா­கின. அதன்­போது சில கோத்­தி­ரங்­க­ளுக்கு சொந்­த­மான கட­வுள்கள் காணாமல் சென்­ற­துடன் சிற்­ற­ர­சுகள் அர­சு­க­ளாக மாறி­ய­போது அதி­கா­ர­மிக்க சிற்­ற­ர­சு­களின் கட­வுள்கள் மேன்மை பெற்­றன.

அதே­வேளை, நாடு­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற போர், கொள்ளை, ஆக்­கி­ர­மிப்­புக்­களின் போது அதி­காரம்மிக்க அல்­லது வெற்றி பெற்ற அர­சுகள் தழு­வி­யி­ருந்த மதங்­க­ளையே ஆக்­கி­ர­மிப்­புக்கு உள்­ளான நாடுகள் பின்­பற்ற வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு மக்கள் ஆளாக்­கப்­பட்­டனர்.

இவ்­வா­றான மத­மாற்­றங்­களின் போது புதி­தாக அறி­மு­க­மான கலா­சா­ரங்கள் மக்கள் ஏற்­க­னவே பின்­பற்றிக் கொண்­டி­ருந்த கலா­சா­ரங்­க­ளுடன் முரண்­படும் நிலை ஏற்­பட்­டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்­தியில் மத­மாற்­றத்­துக்கு எதி­ரான குரல்கள் ஓங்­கத்­து­வங்­கின.

கால ஓட்­டத்தில் உற்­பத்தி மற்றும் அர­சி­ய­லிலும் மதங்­க­ளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கின. மக்கள் மேட்­டுக்­கு­டி­யி­ன­ருடன் முரண்­பட்டு தொழி­லாளர் வர்க்­கத்­துக்­காக குரல் எழுப்­பிய மதங்­க­ளுடன் மக்கள் இணைந்து கொண்­ட­தினை வர­லாற்றில் இருந்து கண்டு கொள்ள முடியும்.


அதே­நேரம் ஒவ்­வொரு  அர­சையும் மையப்­ப­டுத்தி மதங்கள் காணப்­பட்­டன.
அந்த விடயம் கால­வோட்­டத்தில் மதம் மற்றும் அர­சுடன் காணப்­பட்ட உற­வுகள் தகர்க்­கப்­பட்டு மதம் என்­பது தனி மனித விருப்­பு­டனும் உரி­மை­யு­டனும்
தொடர்­பு­பட்ட விட­ய­மாக பரி­ணாமம் பெற்­றதை காண முடி­கி­றது.
விஞ்­ஞான யுகம் உலகில் அறி­மு­க­மா­னதைத் தொடர்ந்து மதங்கள் தொடர்பில்
புதி­யதோர் புரி­த­லையும் பார்­வை­யையும் மக்­க­ளுக்கு அது கொடுத்­தது.
மதங்­களில் காணப்­பட்ட பல இர­க­சி­யங்­களை விஞ்­ஞானம் தகர்த்து
வெளிப்­ப­டுத்தி காட்­டி­யது. மக்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கும் இடையில்
விஞ்ஞானம் ஓர் தளர்வு நிலையை ஏற்படுத்திய போதிலும் கூட விஞ்ஞானத்தால் முழுமையாக மதத்தில் இருந்து மக்களை தூரமாக்க முடியவில்லை.

நாம் மேலே கதைத்த சிற்றரசுகள் ஒன்றிணைந்து அரசாக மாறும் போது சிற்றரசுகள் பின்பற்றிய மதங்களுடன் அரசு உடன்படாத பட்சத்தில் அங்கு புதிய மதம் தோற்றம் பெறுகின்றது என்ற விடயத்தை அடுத்த வாரம் இந்திய அசோக ராஜ்யம் ஐரோப்பிய ரோம இராஜ்யம் என்பவற்றின் நிழலில் நோக்குவோம்.

தொடரும்....
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham