மஹிந்த உயிரோடு இருக்கும்வரை அவருக்கே வாக்களிக்க வேண்டும் - அதாவுல்லா
Saturday, November 22, 20140 comments
எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரோடு இருக்கின்ற வரை அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு விசுவாசமாக இருக்கவும் எமது சமூகம் கடமைப்பட்டுள்ளது என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது. அரசியல் தலைமைகள் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தேசிய காங்கிரஸின் தலைமை தீர்க்க தரிசனமான முறையில் சிந்தித்து முடிவெடுத்துள்ளது.
மூன்றாவது தடவையும் இந்த நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியும் ஆளுமையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளன.
அவரே மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார். இந்த வெற்றியில் இந்த நாட்டிலுள்ள சகல சிறுபான்மைச் சமூகங்களும் கைகோர்த்து ஒன்றிணைய வேண்டும். பின்னர் கைசேதப்படுபவர்களாக மாறிவிடக்கூடாது என நான் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன்"
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment