மு.கா. - சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கிடையே சபையில் அடிதடி
Tuesday, November 25, 20140 comments
கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று அடிதடி இடம்பெற்றுள்ளது.
சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம்.ரியாஸ்க்கும் இடையிலேயே இந்த அடிதடி ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸே காயமடைந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிஸ் காங்கிரஸை கண்டித்து உரையாற்றியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment