மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
முஸ்லிம் சமூகம் அரசியலில் அனாதைகள் என்றோம் பின்னர் அரசியல் அகதிகள் ஆனோம் நமது தலைமைகள் இன்று அரசியல் கைதிகளாய் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
தேசிய அரசியலில் விடியலைத் தேடும் நம் சமூகத்தின் புதிய தலைமுறையினர் உள்வீட்டில் அரசியல் வியாபாரிகளிடமிருந்து விடுதலை கேட்டு நிற்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் சோரம் போன சோனகத் தலைமைகளால் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
செந்நீரும் கண்ணீரும் பாய்ச்சி நாம் மரம் வளர்த்தோம், இன்று தோப்புக்கள் கோப்புக்களை அல்லவா விளைச்சலாய் தந்துள்ளன.
நாரே தக்பீர் நாதம் கேட்டு அல்லாஹு அக்பர் என நாம் முழங்கி அரசியலில் கால் பதித்தோம்...
கோடிகளில் பணம் பெற்று சொகுசான பதவி பெற்று அடியாட்கள் புடைசூழ அந்தி சந்திகளில் அரங்கேற முகவர்கள் மீண்டும் வருவார்கள்..
"நாரே தக்பீர்" என்றல்ல "ஹலாலன் தய்யிபன்" என்றொரு குரல் கேட்டால் "அல்லாஹு அக்பர் " என முழங்கிடவே அனைவரும் நாம் காத்திருப்போம்.
போராளிகளே புறப்படுங்கள்..!

Post a Comment