மங்களவை அரசாங்கத்தில் இணைக்கும் மகிந்தவின் சூழ்ச்சி முறியடிப்பு
Tuesday, November 11, 20140 comments
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை மீண்டும் அரசாங்கத்துடன் இணைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சி முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதால் தேல்வியில் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மங்கள சமரவீரவை மீண்டும் அரசாங்கத்தில் இணைக்கும் வேலைத்திட்டம் முழுயமையாக ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளமையானது அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைய காரணமாக அமைந்துள்ளது என ஜே.வி.பியின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள மங்கள சமரவீர இன்று நாடு திரும்புவதாக இருந்தது. எனினும் அவர் நாடு திரும்புவது மேலும் தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment