ரத்ன தேரரின் போராட்டத்தில் ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இணைந்துகொள்ளத் தீர்மானம்
Tuesday, November 11, 20140 comments
ரத்ன தேரரின் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளன.
தூய்மையான நாளை அமைப்பின் தலைவர் ரதன தேரர், எதிர்வரும் 12ம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கொழும்பு முத்தையா மைதானத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ஏதேனும் ஓர் காரணிக்காக பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து போராட்டம் ஒன்றில் ஈடுபடும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
இந்தப் போராட்டத்தில் ஜனநயாகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க இணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment