நான் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை - கடுகண்ணாவை பிரதித் தலைவர்

Friday, November 28, 20140 comments



அரசுடன் இணைந்து விட்டதாக செய்திகள் பரவிய நிலையில் கடுகண்ணாவை நகர சபை பிரதித் தலைவர் பவய்னா மொஹிதீன் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கிணங்க தான் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

 இவர் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்ததை ஊடகங்கள் அறிவித்திருந்தன. இதன் அடிப்படையிலேயே இவர் அரசுடன் இணைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய திருமதி மொஹிதீன், சிறந்த அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் மோசடிகள் போன்றவற்றை வெளிக்கொண்டு வர இவரே பொறுத்தமானவர் எனவும் தெரிவித்தார்.

இவரது இந்தக் கருத்தின் பின் இவர் அரசுடன் சேர்ந்து விட்டார் என்ற அபிப்பிராயம் மாறி வருகிறது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham