ஒசாமா தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின
Sunday, November 9, 20140 comments
அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவரின் மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
“வாஷிங்டன் போஸ்ட்” இற்கு முன்னாள் கடற்படை அதிகாரி ரொபேட் ஓ நீல் வழங்கிய செவ்வியில் பல விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒசாமா பின் லாடனின் உயிரை எடுக்கும் துப்பாக்கிக் குண்டு தனது துப்பாக்கியில் இருந்தே வெளிப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த கூற்றுக்கு அமைய முன்னர் சீல் விசேட படையணியினையை சேர்ந்த மற் பிசோனேற் தான் பின் லாடனை கொன்றதாக வெளியான செய்தி தவறானது என தெரியவந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அபோட்டபாட் பிரதேசத்தில் அமெரிக்க விசேட சீல் கடற்படையணியினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல் சம்பவத்தின் போது ஒசாமா பின் லாதின் மரணமானதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடற்படை சீல் படையணியினரினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் புகழ் என்பன முற்றிலும் ரகசியமாக காக்கப்படுவது வழக்கம்.
அவை எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடப்படுவதில்லை.
இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சீல் படையணியின் கட்டுப்பாட்டினை உதாசீனம் செய்து ரொபேட் ஓ நீல் தற்போது ரகசிய தகவல்கைள வெளியிட்டுள்ளார்.
ஒசாமா பின் லாதின் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மேலதிக விபரங்களை தருகையில், தாமும் பிறிதொரு சீல் படையணியை சேர்ந்த ஒருவரும், அவர் தங்கியிருந்த கட்டடத்தின் மூன்றாம் தட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
முதலில் ஒசாமா பின் லாதினை பார்த்த மற்ற மற்ற சீல் படை வீரர் அவரை சுட்டுள்ளார்.
இருப்பினும், அந்த துப்பாக்கி சூடு குறி தவறியதில் அவர் தப்பி அறையொன்றினுள் மறைந்திருந்ததாக செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக சென்ற ரொபேட் ஓ நீலி பின்னர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு பின் லாதினின் தலையை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment