கண்டியில் முஸ்லிம் பாடசாலை மாணவி விபத்தில் பரிதாபகரமாக பலி
Friday, November 21, 20140 comments
கண்டி, மடவளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(21) இடம்பெற்ற விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மடவளை, அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் 9 வயதுடைய அப்ரின் சவாஹி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
மேற்படி மாணவி, பாடசாலை செல்வதற்காக பாதை ஓரமாகச் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று இவர் மீது மோதியுள்ளது.
சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரழந்துள்ளார்.
டிப்பர் வாகனத்தி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
Post a Comment