ஜனாதிபதி தேர்தல்: எதிரணியின் பொது வேட்பாளரானார் மைத்திரிபால சிறிசேன
Friday, November 21, 20140 comments
ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அதிருப்தி குழு, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மாதுலுவ சோபித தேரரின் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்,, தூய்மைக்கான நாளைய அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களும் இணைந்து பொது எதிரணியை உறுவாக்கியுள்ளது. இதன் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் எதிரணியினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டை உருவாக்கியுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment