மு.க. குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
Sunday, November 30, 20140 comments
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்.பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி


Post a Comment