எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கியமான இறுதிப் பேச்சுவார்த்தை இன்று கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் நடைபெறவுள்ளது.
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன.
மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதுடன் இன்று முக்கியமான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இறுதித் தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தப்படவிருப்பதுடன் அதில் யார் பொது வேட்பாளர் என அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment