அரசின் இயலாமையால் அம்பாறை காணி பிரச்சினையை தீர்க்கமுடியாதுள்ளது - முஜிபுர் ரஹ்மான்
Thursday, November 13, 20140 comments
அம்பாறை மாவட்ட பாராளுமன் உறுப்பினர்கள் அனைவரும் ஆளும்தரப்பில் இருக்கின்றனர். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிங்களுக்கு மக்களுக்கு காணி தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு தீர்வைபெற்றுகொடுக்க அவர்களால் முடியாதுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹமான் தெரிவித்தார்.
அரசில் இணைந்துகொள்வதன் மூலம் மக்களுக்கு பெரும் சேவையாற்ற முடியும் என கூறிக்கொள்ளும் அரசியல் தலைமைகளால் எதனையும் சாதிக்கா முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் குழுவிடம் அம்பாறை மாவட்ட மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தெடர்பிலும் அதற்காண நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடுகையிலுமே அவர் மேற்காண்டவாறு தெரிவித்ததுள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கு பெருமளவிலான மக்கள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை தொடர்பில் மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக அம்மாவட்டம் முழுவதுமாக மக்களுக்கு காணி தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொழும்பு நகரில் அபிவிருத்தியை காரணம் காட்டி மக்களின் காணிகள் சூறையாடப்படுவதுபோல் அம்பாறையில் தொல்பொருள் ஆய்வுகள் மற்றும் அரச காணிகள், சட்டவிரோத குடியேற்றம் என குறிப்பிட்டு மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அங்குள்ள அரசியல் தலைமைகள் அத்தனைபேரும் அரசுடன் இருந்த போதிலும் இதற்கு தீர்வை பெற முடியவில்லை.
அக்கறைப்பற்றில் வட்டமடு பகுதியில்லுள்ள மக்களின் 500 ஏக்கர் வரையிலான மேய்ச்சல் நிலம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே பொத்துவில் நகரில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.அத்தோடு பொத்துவில் கரங்கோவாவட்டையில் மக்களின் காணியில் யானை தொல்லை இருப்பதாக காரணம் காட்டி அங்கு காணி அபகரிப்பு இடம்பெருகின்றது. அஷ்ரப் நகரில் முஸ்லிம்களின் காணி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சம்மாந்துறை கரங்கோவாவட்டை பகுதியிலும் மக்களின் காணியில் யானை தெல்லையை காரணம் காட்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட கணிகளுக்கு நட்டஈடு வழங்கும்போது சிலர் ஆவணங்கள் இன்மையால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் நீதி வழங்கப்படாதுள்ளது. அத்தோடு சவூதி அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட சுனாமிவீட்டுத்திட்டமும் இன்றுவரைக்கும் மக்களுக்கு கையளிக்கப்படாதிருக்கின்றது. இவ்வாறு மக்களின் காணி மற்றும் இருப்பிடம் தெடர்பிலான பிரச்சனை நீண்டுகொண்டே செல்கின்றன. இதற்கு அங்குள்ள அரசியல்
வாதிகளால் தீர்வைபெற்றுக்கொடுக்க முடியாமையினால் மக்கள் எம்மிடம் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் நாம் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment