அக்குறணை பாடசாலை மைதானத்தில் இளைஞனின் சடலம்
Thursday, November 6, 20140 comments
கண்டி, அக்குறணை பிரதேச பாடசாலையொன்றின் விளையாட்டு மைதான அரங்கிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் இந்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை புலுகோஹதென்னையை சேர்ந்த 26 வயதுடைய சியாம் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும், இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்த அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment