ஏழாவது ஜனாதிபதி தேர்தலின்போது, பொதுவேட்பாளரை நிறுத்தும் பொருட்டு எதிர்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவது எதிர்வரும் 19ஆம் திகதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதானத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்ததேரர்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 17ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்தப்படவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வாறு 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து வேலை செய்ய தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவேட்பாளர் புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்து 19 வரை ஒத்திவைப்பு
Sunday, November 16, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment