மத்தியூஸ் கன்னிச் சதம்; இவ்வாண்டில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர்

Sunday, November 16, 20140 comments


இலங்கை அணியில் தலைவர் தனது கன்னிச் சதத்தை இன்று கடந்துள்ளார். அத்தோடு ஒருநாள் அரங்கில் இவ்வாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராகவும் திகழ்கிறார்.

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8 அரைச்சதத்துடன் 1,062 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் 139 ஓட்டங்களை விளாசிய மேத்யூஸ், இந்திய மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு அணித்தலைவர் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஸ்டிராஸ்-158 ஓட்டங்கள் (பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக 2011ம் ஆண்டு), அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி-156 ஓட்டங்கள் (நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 2013) ஆகியோர் உள்ளனர்.

இந்தப் போட்டியில் 10 சிக்சர்கள் விளாசிய மேத்யூஸ், ஜெயசூர்யாவுக்கு (1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 11 சிக்சருடன் 134 ஓட்டங்கள்) அடுத்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.








Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham