ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் இணக்கப்பாடு இல்லை - பொதுபலசேனா
Friday, October 10, 20140 comments
பொதுபலசேனாவுக்கும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். இந்து அமைப்புக்கும் இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தைகளோ இணக்கப்பாடோ ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை எனத்தெரிவித்த பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனாவுடன் இணைப்பு இல்லை என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்:-
மியன்மாரில் விறாது தேரர் தலைமையிலான 969 அமைப்புடன் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதைப் போன்று இந்தியாவின் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸூடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம் என்ற கருத்தையே நான் தெரிவித்தேன்.
இதனை திரிபுப்படுத்தி அவ் அமைப்புடன் பொதுபல சேனா இணைந்துள்ளதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் உண்மையில்லை. 969 அமைப்புடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைப் போன்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்காக தற்போது சிறு சிறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடன்படிக்கையொன்றை செய்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தெற்காசியா மற்றும் ஆசிய வலயத்தில் முஸ்லிம் தீவிரவாதமற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதும் பௌத்த மதத்தை பாதுகாப்பதுமே எமது இலக்காகும்.
இது தொடர்பில் இந்திய பிரதமர் மோடியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம். என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதாவது ராஷ்ரீய சுயம் சேவா சங்கம் இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் விசேடமாக மதமாற்றத்தை தடுப்பதற்காக 1935 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
தற்போது இவ் அமைப்பின் தலைவராக மொஹான் பகவத் செயற்பட்டு வருகின்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை போன்று உலகில் இந்துக்களின் மதமாற்றத்தை தடுக்கவும் உரிமைகளை பாதுகாப்பதற்குமாக 196 நாடுகளில் இந்து சுயம் சேவா சங்கங்கள் இயங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment