இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் ஹுஸைன் திட்டம்
Monday, October 20, 20140 comments
இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் ஹுஸைன் திட்டமிட்டார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் பதவிக்காலத்தின் போது 1981ஆம் ஆண்டு ஈராக் அணு உலைகளை இஸ்ரேல் வானூர்திகள் குண்டு வீசி அழித்தன.
அதற்கு பழி வாங்க சதாம் ஹுஸைன் திட்டமிட்டார் எனவும், அதன்பொருட்டு, அப்போதைய இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்த மெனாசெம் பிகினை கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை கடத்தி பாக்தாத் கொண்டு வர சதாம் ஹுஸைன் திட்டமிட்டிருந்த நிலையில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவரின் வற்புறுத்தலை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சதாம் ஹுஸைனின் வழக்கறிஞர் பாடீ ஆரிப்தான் எழுதிய நூலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் விரைவில் வெளிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் முன்னாள் ஜனாதிபதியான ஹுஸைன், அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment