கடுகஸ்தோட்டை ஆற்றில் வேன் விழுந்து மாவனெல்லையை சேர்ந்து மூவ்வர் மரணம்
Friday, October 3, 20140 comments
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று ஆற்றில் விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிஸ்ரியா ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள உறவினரின வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலங்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment