சந்தைக்கு வருகிறது LUMIA 735 மற்றும் 830

Sunday, September 7, 20140 comments


இந்த வார ஆரம்பத்தில் பேர்லினில் இடம்பெற்ற IFA நிகழ்வில் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய Windows Phone சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி Lumia 735 மற்றும் 830 எனும் இரு ஸ்மார்ட் கைப்பேசிகள் எதிர்வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் Nokia Lumia 735 ஆனது 4.7 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரை உட்பட 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Snapdragon 400 SoC Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 6.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினைக் கொண்டுள்ளது.

Lumia 830 ஆனது 5 அங்குல அளவுடைய தொடுதிரை உட்பட 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவற்றுடன் 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினை கொண்டதாகக் காணப்படுகின்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham