ஊவாவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்
Wednesday, September 3, 20140 comments
எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மேற்படி பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இனங்களுடையில் நல்லிணக்கத்தையும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உத்தரவாதப்படுத்தும் நோக்கிலுமே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் அடிப்படையில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்தால், சிறியளவிலான கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துதல் போன்ற பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கடந்த கடந்தவாரம், சில்மியாபுர, பொரகஸ், பாதிநாவல போன்ற பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு பிரச்சார நடவடிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆரம்பித்தது.
அத்துடன் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றினையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்தியது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் இம்தியாஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி பொதுக்கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் மற்றும் பைரூஸ் ஹாஜியார், ஐ.தே.கவின் மத்திய மாகாணசபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார், ஐ.தே.கவின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், வெலிமட பிரதேசசபை எதிர்கட்சித் தலைவரும்GK.சுனில், பதுளை மாவட்ட ஐ.தே.கவின் வேட்பாளர் அமீர் உட்பட பலர் உரையாற்றினார்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேபோன்று பல பிரச்சார நடவடிக்கைகளை ஊவாவில் முன்னெடுப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Post a Comment