இலத்திரணியல் அடையாள அட்டை புகைப்படத்திற்கு தொப்பி, ஹிஜாபுடன் தடை ஏதும் கிடையாது
Thursday, September 4, 20140 comments
நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டையில் தமது மத ஆடையாளங்களுடன் புகைப்படங்களை சேர்ப்பதில் எந்தவித தடைகளுமில்லை என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் தாம் அணியும் ஹிஜாப்களுடனும் ஆண்கள் தொப்பியுடனும் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் என ஆணையாளர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment