கிழக்கு மாகாண சபையில் கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம்
Tuesday, September 30, 20140 comments
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தகர்க்கப்பட்டதாக கூறுப்படும் கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் இன்று கிழக்கு மாண சபையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசல் இருக்கும் நிலையில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பில் அறிந்துகொள்ள பிரதேசமக்கள் ஆர்வமாக இருக்கினர். ஆனாலும் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க அரசங்கத்திலுள்ள முஸ்லிம் தலைவர்கள் தவறிவிட்டனர்.
சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களின் பின்னர் கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பள்ளிவாலை சென்று பார்வையிட்டார். இந்நிலையில் பள்ளிவாசலை பார்வையிடுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனுமதி கேட்டபோதும் இதுவரை அவர்களை அங்கு அழைத்து செல்லாமல் இருக்கின்றமை முதலமைச்சரின் கையாலாகத்தனம் என கிழக்கு மாகாண சபை உறுப்பிர் இம்ரான் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment