ஹரீன் ஊவா மக்களுக்கு செய்த தியாகம்போல் ஹகீம்மும் ரிஷாடும் முஸ்லிம்களுக்கு என்ன செய்தனர் - முஜிபுர்
Monday, September 8, 20140 comments
ஊவா மக்களின் வெற்றிக்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஹரீன் பெனார்ண்டோ தியாகம் செய்தது போது அமைச்சர்களான ஹக்கீமும் ரிஷாடும் என்ன தியாகம் செய்தனர் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் வேட்பாளர்களான அமீர் மொஹமட் மற்றும் நஷீர் ஆகியோரை ஆதரித்து நேற்றைய தினம் பண்டாரவளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையில் முஸ்லிம்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். நீதியமைச்சராக இருந்துகொண்டு ஹக்கீமினால் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்று கொடுக்க முடியாதுள்ளது. அத்தோடு அமைச்சரவையில் இருக்கும் ரிஷாடினாலும் எதனையும் செய்ய முடியாதுள்ளது. இவர்களின் பதவிகளினாலும் சுகபோகங்ளினாலும் வாக்களித்த மக்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இந்நிலையில் இவர்களார் முஸ்லிம் மக்களுக்காக பட்டங்களையும் பதவிகளையும் தியாகம் செய்து மக்களின் உரிமைகளுக்காக போராட முடியாதுள்ளது.
ஊவா மாகாணத்தில் அரசின் அத்து மீறல்களை தடுத்து மக்களாட்சியை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக ஹரீன் பெனார்ண்டோ தனது பாராளுமன்ற பதவியையே தியாகம் செய்தார். ஆனால் ஹக்கீமினாலும் ரிஷாடினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களினாலும் எந்த தியாகத்தையும் செய்ய முடியாதுள்ளது என்றார்.
Post a Comment