அல்கைதாவின் அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பம்:பொது பல சேனா

Monday, September 8, 20140 comments



அல்கைதாவின் அச்சுறுத்தல் தெற்காசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகிற்கே அச்சுறுத்தலாகும். அத்தோடு இது உலக முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகுமென்று எச்சரிக்கை விடுக்கும் பொது பல சேனா.

இலங்கையில் உள்ள மற்றும் இங்கு வரும் பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்குவதோடு துறைமுகத்திற்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்ய விசேட நடவடிக்கைகளை முடுக்கி விவிட வேண்டுமென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

இந்தியாவில் கிளையை அமைத்து முழு தெற்காசியாவிலும் ஜிகாத் கொடியை பறக்கவிடுவோம் என அண்மையில் அல்கைதா இயக்கத் தலைவர் விடுத்துள்ள அச்சுறுத்தல் தொடர்பாக தெளிவு படுத்துகையிலேயே பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்;

அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று தான் அல்கைதா அமைப்பு இன்று செயற்படுகின்றது.

இவ்அமைப்பு விடுத்துள்ள அச்சுறுத்தல் தெற்காசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகிற்குமே ஆபத்தானதாகும்.

அத்தோடு இது உலக முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகும்.

இந்தியா 


இந்தியாவின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து அந்நாட்டை துண்டு துண்டாக பிரிக்கவே அல் கைதா முயற்சிக்கின்றது. நல்ல வேளை மோடி போன்ற சாதுரியமிக்கவர் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.

இலங்கை


இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது எமது நாட்டை பாதிக்கும்.

எனவே பாதுகாப்பு பிரிவினர்  உளவுத் துறையினர் விழிப்பாக இருக்க வேண்டும்.

துறைமுகம்


விசேடமாக சுங்கத் திணைக்களத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

துறைமுகம் ஊடாக கொள்கலன்களை ஒன்று விடாது கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பாகிஸ்தானிலிருந்து கிழங்கு கொண்டு வருவதாகக் கூறிக்கொண்டு போதைப்பொருட்கள் வருவது போன்று அல்கைதா ஆட்கள் ஆயுதங்கள் இங்கு வரலாம்.

சுங்கத் திணைக்களத்தில் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பாதுகாப்பு பிரிவினரின் சோதனைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

விமானங்கள் மூலம் இங்கு வரும் பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் எதற்காக வருகின்றனர் என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.

அது மட்டுமல்லாது வீசா காலம் முடிந்ததும் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்காணிக்க வேண்டும்.

வாள்


அத்தோடு கொழும்பை அண்டிய பிரதேசங்கள் கிராமங்களில் சுதந்திர வாள் என ஆயுதங்கள் தயாரிக்கும் இடங்கள் சோதனையிடப்பட வேண்டும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார். (virakesari online)
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham