நபிகளை அவமதித்த இஸ்லாமிய நபருக்கு தூக்கு!

Thursday, September 25, 20140 comments


ஈரானில் இஸ்லாமிய மதத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவமதித்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானை சேர்ந்த சொஹைல் அரபி (Soheil Arabi age-30) என்ற நபர் சமூக வலைத்தளங்களில் பல கணக்குகளை வைத்துள்ளார்.

இவற்றில் அவர் இஸ்லாமிய இறைதூதரான முகமது நபியை இழிவுபடுத்தும் வாசகங்களைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விடயம் தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் அவரையும் அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன்பின் அவரது மனைவியை மட்டும் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் சொஹைல் அரபியின் மன நிலை சரியற்ற நிலையில் தான் அவர் நபிகளை அவமதித்ததாக கூறப்படுகிறது.

எனினும் இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கருதி, மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham