தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளது சஊதி
Sunday, September 7, 20140 comments
சஊதி அரேபிய அரசாங்கம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான மொழிப்பெயர்ப்பாளர்களையும், மத்தியஸ்த்தர்களையும் இணைத்துக் கொள்ளவிருப்பதாக அரப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெ ளியிட்டுள்ளது.
சஊதியில் அதிக அளவான இலங்கையர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நீதிமன்ற செயற்பாடுகளின் போது மொழி தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக சஊதி அரேபியாவின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரபு மற்றும் தமிழ் அல்லது சிங்களம் தெரிந்த, பட்டதாரிகள் அல்லது மொழிப்பெயர்ப்பு துறையில் குறைந்த பட்சம் மூன்று வருட அனுபவம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு மாதாந்தம் 4 ஆயிரம் சஊதி ரியால் வேதனம் வழங்கப்படுவதுடன், போக்குவரத்து செலவினம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
Post a Comment