தேசிய இறப்பர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: கபீர் ஹாஸிம்
Monday, September 29, 20140 comments
அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலருக்கு இறப்பர் பால் மற்றும் இறப்பர் ஷீட்டுகளை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக தேசிய இறப்பர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இறப்பர் செய்கையின் மூலம் வாழ்க்கை நடத்தி வரும் இலங்கையின் மிகவும் வறிய மாவட்டமான மொனராகலை மாவட்ட மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ளனர்.
அதிகளவில் இறப்பர் செய்கையிலும் ஈடுபடுவோர் கேகாலை மாவட்டத்தில் உள்ளனர். அந்த மாவட்டத்தில் 41 ஆயிரம் ஹெக்டேயரில் இறப்பர் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் மக்கள் இறப்பர் தொழிலை நம்பி வாழ்கின்றனர். 75 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரே வாழ்வாதாரமாக இறப்பர் தொழில் இருந்து வருகிறது எனவும் கபீர் ஹாஸிம் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment