இலங்கைக்கு எதிராக யுத்த விசாரணை நடத்துமாறு கோரிய முதல் நாடு இஸ்ரேல்- தேசிய சூரா சபை
Tuesday, September 16, 20140 comments
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடத்துமாறு கோரிய முதல் நாடு இஸ்ரேலாகும் என தேசிய சூரா சபை சுட்டிக் காட்டியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் உதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் பேணப்பட்டு வரும் சகல ராஜதந்திர உறவுகளையும் துண்டிக்குமாறு தேசிய சூரா பேரவை வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தேசிய சூரா பேரவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனத்திற்கு நிதி உதவி வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 67 ஆண்டுகளான பலஸ்தீனத்தை முழு நாடாக அங்கீகரிக்காமை ஐக்கிய நாடுகள் அமைப்பின் தவறாகும் என குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த போராட்டத்திற்கு பொதுபல சேனா அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சி அளித்து ஆயுதங்களை வழங்கியதனை பொதுபல சேனா மறந்துவிட்டு செயற்பட்டு வருவதாக தேசிய சூரா பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment