பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப்
புரிந்துள்ள தென்னாபிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான
அனைத்து வகையான கொலைக் குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி
செய்துள்ளார்.
தங்கப்பதக்கம் வென்றுள்ள வீரரான பிஸ்டோரியல், தனது பெண் நண்பர் ரீவா ஸ்டின்கேம்பை திட்டமிட்டுக்கொலை செய்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்று நிரூபிக்க அரசதரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தொகோசில் மசிபா கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் அவர் குற்றவாளி இல்லை என்று கூறிய நீதிபதி, துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது ஆனால் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிஸ்டோரியஸ் சுடவில்லை என்றும் தெரிவித்துளார்.
பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதால் ஆயுள் சிறை தண்டனையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

Post a Comment