அல்கைதா தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக இலங்கை மாறி வருகின்றது: சிங்கள ராவய
Friday, September 12, 20140 comments
அல்கைதா தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கைதா தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் அல்கைதா காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையிலும் விரைவில் இவ்வாறான ஓர் காரியாலயமொன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலக மக்களின் சார்பில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அல்கைதா தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் சிங்கள ராவய அமைப்பு அமெரிக்கத் தூதரகத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment