மொனராகலையில் முஸ்லிம்களை தேர்தல் தொடர்பில் விஷேடமாக சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதுளையில் முஸ்லிம்களை சந்திக்காததன் மர்மம் என்ன என்பது தற்போது பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது.
எனினும் இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று பதுளை மாவட்டத்தில் மஹிந்த அரசு முஸ்லிம் வேட்பாளரை களமிரக்கவில்லை. மொனராகலையிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிரக்கப்படவில்லை. மற்றையது, மொனராகலையில் ஜனாதிபதி முஸ்லிம்களை சந்தித்து தேர்தலில் அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் பதுளையில் அவ்வாறு சந்திக்கவுமில்லை. அரசாங்கத்தை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்ளவும் இல்லை.
இதனுடன் மொனராகலையில் முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. ஆனால் பதுளையில் போட்டியிடுகின்றது. இதனையும் தொடர்புபடுத்தி பார்த்தால் விடை புரியும்.
ஆக ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஊவா மாகாண சபை தேர்தலில் ஹக்கீம் - ரிஷாட் கூட்டணி களமிறக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்துகொண்டால் சரி....

Post a Comment