முஸ்லிம்கள் மீதான அவதூறுப் பேச்சு:பா. ஜ.க எம்.பியை கைதுச் செய்ய காங்கிரஸ் கோரிக்கை!
Sunday, September 14, 20140 comments
இந்நதிய உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறான கருத்தை கூறிய பா.ஜ.க எம்.பி. ஆதித்ய நாத்தை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி புதன்கிழமை கூறியதாவது:
முஸ்லிம்கள் காதலித்து மத மாற்றம் செய்வதாக (லவ் ஜிகாத்) ஆதித்யநாத் கூறியுள்ள கருத்துகள், அரசியலில் பகைமை உணர்வை ஏற்படுத்த விரும்புவதையே காட்டுகிறது. இது தொடர்பாக அவருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எனவே, ஆதித்யநாத் கைது செய்யப்பட வேண்டும். நாட்டின் அழகே ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதுதான். இதற்கு எதிராக இருப்பவர்களை தேசப்பற்றாளர்கள் என கூற முடியாது. அவர்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று ரஷீத் ஆல்வி கூறினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment