ஐ.தே.க., ஜேவி.பி.யில் போட்டியிட்ட முஸ்லிம் உறுப்பினர்களும் தோல்வி
Sunday, September 21, 20140 comments
ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய சார்பில் போட்டியிட்ட மூவ்வரும் தோல்வியடைந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட ஈ.ஏ.நஷீர் 15686 வாக்குகளையும் முஹம்மத் அமீர் 15003 வாக்குகளையும் பெற்று தேல்வியை தழுவியுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட சப்ரி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றார். மொனராகலையில் 10 ஆயிரம் வரையிலான முஸ்லிம் வாக்குகள் இருக்கின்ற நிலையில் இவருக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட முஹம்மத் இபாம் 392 வாக்குகளையும் மொனராகலையில் போட்டியிட்ட ராபி 300 மேற்பட்ட வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
அரசு தமது கட்சி சார்பில் எந்த முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிரக்காத நிலையில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா இணைந்து பதுளைமாவட்டத்தில் போட்டியிட்டு 5045 வாக்குளை பெற்றுக்கொண்டது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment