இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர் – சம்பிக்க
Tuesday, September 30, 20140 comments
இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக மாற்றமடைந்து வருவதாக தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாமெல்பர்னில் நடைபெற்ற அநாகரீக தர்மபாலவின் 150ம் நினைவு நிகழ்வுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கடும்போக்குடைய சக்திகள் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும், சிங்கள பௌத்த இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கொலன்னாவ, கம்பளை, காலி மற்றும் கண்டி போன்ற பல்வேறு இடங்களில் சிங்கள பௌத்தவர்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளாh.
தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்த நூற்றாண்டில் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மையினத்தவராக மாற்றமடைவதனை தடுக்க முடியாது என அவுஸ்திரேலிய புலம்பெயர் சிங்களவர்களிடம், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சிங்கள சக்திகளை அணி திரட்டும் முயற்சிகளில் ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட தேசியவாத கட்சிகள் சில முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment