கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மத்திய சிரியாவில், அந்நாட்டு அரசின் போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 48 பேர் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த எஸ்ஓஹெச்ஆர் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், “”கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தால்பிசே நகரில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிரியா போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நிகழ்ந்து வரும் நிலையிலும், இரண்டே நாள்களில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இது முதல்முறை என்று கூறப்படுகிறது.

Post a Comment