ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம்!
Friday, August 15, 20140 comments
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2870 பரீட்சை மத்திய நிலையங்களில் 335,585 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைகளில் தோற்றவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிறன்று காலை 09.30 தொடக்கம் 10.15 வரை மற்றும் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையிலும் இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment