பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக லிபியாவிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க நடவடிக்கை

Monday, August 11, 20140 comments


லிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக  அங்குள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களின் உறவினர்களிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான அணைத்து வசதிகளையும் செய்துதரத் தயாராகவுள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அண்மையில் 17 பேர் கொண்ட குழு இவ்வாறு லிபியாவில் இருந்து நாடு திரும்பினர்.

லிபியாவில், இலங்கை ஊழியர்கள் சுமார் 200 பேர் வரையில் இருப்பதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் மோதல்கள் நிலவுவதாகவும், எதிர்காலத்தில் அவை வலுப்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதன்படி லிபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு, இலங்கை தூதுவராலயம் மூலமாக இதனை அறிவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் லிபியாவில் உள்ள இலங்கையர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham