கரிமலையூற்று பள்ளிவாசல் அகற்றப்பட்டது

Sunday, August 17, 20140 comments


திருகோணமலை மாவட்டம், இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கரிமலையூற்று கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நம்மவன் தளத்துக்கு தெரிவித்தார்.

உல்லாச விடுதி ஒன்று அமைப்பதற்காக இப்பள்ளிவாசல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிப்பதாகவம் அவர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பாக விடியல் இணையத்தளத்திற்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"திருகோணமலை துறைமுகத்தை அன்டிய அதியுயர் வலயத்திலுள்ள கரிமலையூற்று பள்ளிவாசல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு படையினால் உடைக்கட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் குறித்த பிரதேச மக்கள் ஊடாக இன்றே வெளிவந்துள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மலைப் பகுதியிலுள்ள இந்த பள்ளிவாசலை அவதானித்தவாரே செல்லவர். எனினும் கடந்த இரு தினங்களாக குறித்த பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக மீன்படிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று மீன்பிடிக்கச் சென்றபோது பள்ளிவாசலை பார்வையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த பள்ளிவாசாலை காணவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் கட்டிடங்கள் உடைக்கும் பாரிய சத்தங்கள் அதனை அண்டி பிரதேச மக்களுக்கு கேட்டுள்ளது. எனினும் இந்த சத்தத்தினை பொதுமக்கள் பெரிதாக கனக்கெடுக்கவில்லை. எனினும் இன்று மீன்பிடிக்கச் சென்றோர் பள்ளியினை காணாமையினாலே பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

இது குறித்து குறித்த பிரதேச மக்கள் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எனது கவனத்திற்கும் கொண்டுவந்தனர். குறித்த பிரதேசம் அதியுயர் வலயம் என்பதால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.

திருகோணமலை துறைமுகத்தை அன்டிய மலைப் பகுதியிலுள்ள இந்த பள்ளிவாசல் 1926ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. எனினும் இது ஜும்ஆ பள்ளிவாசலாக 1947 பதிவுசெய்யப்பட்டது. யுத்தத்தினால் இந்த பள்ளிவாசல் சேதமடைந்திருந்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சரான நஜீப் ஏ. மஜீத், கூட்டுறவுத் துறை அமைச்சராகவிருந்த போது 2007ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசலுக்கு 580,000 நிதியொதுக்கீடு செய்தார்.  இந்த நிதியின் ஊடாக இந்த பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைகள் இடம்பெற்றன. எனினும் 2009ஆம் ஆண்டு இந்த பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகணடப்படுத்தப்பட்டமையினால் இந்த பள்ளிவாசலில் தொழுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

யுத்த காலத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசம் யுத்த முடிவிற்கு பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் அவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பிரதேசமாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham