காத்தான்குடியில் 3 பிள்ளைகளின் தாய் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு

Sunday, August 17, 20140 comments


மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (17.8.2014) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காத்தான்குடி - பதுறியா வீதியிலுள்ள மரைக்கார் லேனில் வசித்துவரும் எம்.சித்தி நழீபா (33) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham