குழுவொன்றின் தாக்குதலில் குடும்பஸ்த்தர் மரணம்; மீராவோடையில் சம்பவம்!
Sunday, August 24, 20140 comments
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீராவோடை பவுசி மாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (23) மாலை 06.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தமுனை பாடசாலை வீதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசர் (வயது 38) என்பரே இவ்வாறு உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீறாவோடை பவுசி மாவத்தையில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்து விட்டு அருகில் உள்ள சில்லறைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போதே அருகில் குடியிருப்பவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக சேர்ந்து தாக்கியதில் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினாலேயே இவர் உயிர் இழந்திருக்கலாம் என்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரணம் அடைந்தவரின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment