மருதானை பள்ளிவாசலில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்
Sunday, August 24, 20140 comments
கொழும்பு 10 மருதானை டீன்ஸ் வீதியில் உள்ள சின்னப்பள்ளிவாசலில் தொடர்ந்தும் சில மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி. கெமரா பொருத்தப்பட்டுள்ள நிலையிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை பள்ளிவாசலுக்குள் உறங்கிக்கொண்டிருந்து நபர் ஒருவரின் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம். திருட்டுபோயுள்ளது. அவர் பணப்பையை தனது அக்குள் பகுதிக்குள் இடுக்கிக் கொண்டு உறங்கிய நிலையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பள்ளிவால் சீ.சீ.டி.வி. கெமராவின் உதவியுடன் திருடர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment